/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 22, 2024 07:36 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மழையால் பாதித்த அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண உதவி, சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும், பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ச்சுனன், மாநில பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் முத்தையன், இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ், தலைவர் பிரஸ் குமரன் முன்னிலை வகித்தனர்.
இதில், நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், தீனதயாளன், முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், புலியனுார் விஜயன், கிருஷ்ணமூர்த்தி, பன்னீர், முகுந்தன், கண்ணன், ராமதாஸ், மாவட்ட பேரவை இணை செயலாளர்கள் ரயின்போ ரகுநாதன், குமார், துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, மாவட்ட பாசறை ஜியாவுதீன், ஐ.டி., பிரிவு மண்டல தலைவர் காமேஷ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், வடபழனி, கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், செஞ்சி தொகுதி வழக்கறிஞர் அணி செயலாளர் வேலவன், மாவட்ட பிரதிநிதி முருகன், ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் பாக்யராஜ், விவசாய அணி தவமணி, நகர மன்ற கவுன்சிலர்கள் வழக்கறிஞர் ராதிகா, கோல்டு சேகர், கோதண்டம், நகர துணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில், வர்த்தக அணி செந்தில்வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.