/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க.,நிவாரண பொருட்கள் வழங்கல்

ADDED : டிச 19, 2024 06:47 AM

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அ.தி.மு.,க மாவட்ட செயலாளர் நிவாரண பொருட்களை வழங்கினார்.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள அரசூர், இருவேல்பட்டு, காரப்பட்டு, ஆனத்தூர், சேமங்கலம், கண்ணாரம்பட்டு, கிராமம், தனியாலம்பட்டு, பொய்கை அரசூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான அரிசி, சேலை, டவல் உள்ளிட்ட நிவாரண பொருட்களை, கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட கழக செயலாளர் குமரகுரு வழங்கினார்.
இதில் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாக்யராஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை தலைவர் வெங்கடாஜலபதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரேம்குமார், ஒன்றிய அவைத்தலைவர் வேலா யுதம், உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.