/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., தலைமையை ஏற்க தயார்; அ.ம.மு.க., துணை பொதுச் செயலாளர் பேட்டி

ADDED : நவ 18, 2024 08:29 PM
விக்கிரவாண்டி; பழனிசாமி தலைமை இல்லாத அ.தி.மு.க., வை ஏற்க தயார் என முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க., மாநில துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் பேட்டி.
விக்கிரவாண்டியில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க.,வில் உள்ள உண்மையான எம்.ஜி.ஆர்., ஜெ., தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் பழனிசாமி என்ற தனிநபரின் செயல்பாட்டால் கட்சி ஒன்றாக இணைய முடியவில்லை.
பழனிசாமி இல்லாத அ.தி.மு.க.,வை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வரும் காலங்களில் கட்சி ஒன்றிணைய நடவடிக்கை எடுக்கப்படும். பழனிசாமியின் 4 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ., வேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்தார்.
ஆனால் கடந்த எம்.பி., தேர்தலில் மத்தியில் மீண்டும் வலுவான ஆட்சி வந்து விடக்கூடாது என தனியாக அ.தி.மு.க., வில் வேட்பாளர்களை நிறுத்தி தி.மு.க., வினர் வெற்றிக்கு அவர்களின் 'பி' டீமாக பழனிசாமி செயல்பட்டார். இவ்வாறு செந்தமிழன் கூறினார்.