/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா
/
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா
ADDED : செப் 12, 2025 04:06 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் பன்னீர் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
விக்கிரவாண்டி ஒன்றியம் எசாலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்-சத்திய லீலா தம்பதியின் மகள் சுகாசினிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் பையூரைச் சேர்ந்த தேவராஜ்-உமா தம்பதி மகன் ஜெகநாதனுக்கும் ஆரணி அடுத்த நடுக்குப்பத்தில் நடந்த திருமண விழாவிற்கு மாவட்டச் செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தி பேசினார்.
நியூஸ் ஜெ.,நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன், எம் .எல் .ஏ.,க்கள் சேவூர் ராமச்சந்திரன், சக்கரபாணி, சிவக்குமார், பாக்கியராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முத்தமிழ் செல்வன், சுப்பிரமணி, வெங்கடேசன், ஞான மூர்த்தி, சிவானந்தம், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஜெயசுதா, துாசி மோகன், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, பாலகிருஷ்ணன், ராமதாஸ், கண்ணன், சுரேஷ்பாபு, விஜயன், சுரேஷ்பாபு, நகர செயலாளர்கள் பசுபதி, முருகவேல், பூர்ணராவ், சங்கர்,நிர்வாகிகள் சரவணகுமார், பெரியான், கிருஷ்ணன், அந்துவான், அய்யனார், ரவி, திருநாவுக்கரசு, குமார், பழனி, மாவட்ட ,ஒன்றிய, நகர செயலாளர்கள் கிளைச் செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக விழாவில் விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்-முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலைமதி பன்னீர், செல்வம்-சத்திய லீலா, தேவராஜ்-உமா குடும்பத்தினர் வரவேற்றனர்.