/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பறக்கும்படை வாகன சோதனை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு
/
பறக்கும்படை வாகன சோதனை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு
ADDED : மார் 16, 2024 11:45 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை கண்காணிப்பை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகளில், தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகளை தொடங்கியுள்ளனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனி நேற்று இரவு 7:30 மணிக்கு, திருச்சி சாலையில் விழுப்புரம் அருகே ஜானகிபுரம் அடுத்த ஆவின் சந்திப்பு பகுதியில், தேர்தல் பறக்கும்படை வாகன சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்டு அனுப்பி வைத்தனர்.
எஸ்.பி., தீபக் சிவாச் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

