/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி அல்-ஹிலால் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
/
செஞ்சி அல்-ஹிலால் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
செஞ்சி அல்-ஹிலால் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
செஞ்சி அல்-ஹிலால் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 18, 2025 09:19 PM

செஞ்சி : செஞ்சி அல்-ஹிலால் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 69 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதம் வெற்றி தேடி தந்துள்ளனர். மாணவிகள் ஜைனா ஷாகிர், யாஸ்மின், புனிதா, சத்யா, நஸ்ரியா, நவீனா ஆகியோர் 500க்கு 495 மதிப்பெண்ணும், மாணவி பாஹிசா பர்ஹீன் 494 மதிப்பெண், மாணவர் ஷல்மான், மாணவி பசிஹா ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பிடித்தனர்.
ஆங்கிலத்தில் ஒரு மாணவனும், கணிதத்தில் 20 மாணவர்களும், அறிவியலில் 20 மாணவர்களும், சமூக அறிவியலில் 8 மாணவர்களும் 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். பள்ளியின் சராசரி தேர்ச்சி விகிதம் 464 ஆகும்.
முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை பள்ளி நிறுவனர் சையத் மஜீத் பாபு, தாளாளர் சையத் ரிஸ்வான் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். பள்ளி முதல்வர் அப்ரோஸ்கான் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உடனிருந்தனர்.