UPDATED : நவ 29, 2026 07:36 PM
ADDED : நவ 29, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில், 3 பேரை கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், 56; சி.மெய்யூர் மதியழகன், 66; பேரங்கியூர் ஆறுமுகம், 45; கொண்டசமுத்திரபாளையம் முருகேசன், 66; ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில் பெருமாள், மதியழகன், உட்பட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 127 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
