UPDATED : நவ 29, 2026 07:38 PM
ADDED : நவ 29, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
திண்டிவனம் சோழமண்டலம் லயன்ஸ் சங்கம், வாசவி கிளப், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமை, தொழில்அதிபர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
முகாமில் நோயாளிகளுக்கு, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை குழுவினர் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். 28 பயனாளிகள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முகாமில், சங்கத்தின் சாசன தலைவர் சந்தானம், நிர்வாகிகள் பாலமுருகன், மதிவாணன், சுபத்ரா வாசவி கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை கலிவரதன் செய்திருந்தார். சங்க நிர்வாகி இப்ராஹிம் நன்றி கூறினார்.
