/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு அனைத்து துறையினர் ஆலோசனை
/
முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு அனைத்து துறையினர் ஆலோசனை
முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு அனைத்து துறையினர் ஆலோசனை
முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு அனைத்து துறையினர் ஆலோசனை
ADDED : நவ 22, 2024 06:34 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் முதல்வர் வருகையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி, ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரத்திற்கு வரும் முதல்வர் ஸ்டாலின், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்கான பயனாளிகள் தேர்வு பட்டியலை துறை சார்ந்த அலுவலர்கள் தயார் செய்வதோடு, பயனாளிகளை அரசு நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும். பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகள், சிற்றுண்டி வசதி ஏற்படுத்த வேண்டும்.
மின் வசதி, ஜெனரேட்டர் வசதி, தற்காலிக கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.
தற்காலிக மருத்துவ முகாம், தீயணைப்பு வாகன வசதி, போலீஸ் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை முன்னேற்பாடாக செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, சப் கலெக்டர் முகுந்தன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.