ADDED : பிப் 21, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் வரும் 25ம் தேதி அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடக்க உள்ளது.
ஹிக்வானா ஷிடோரியோ கராத்தே பள்ளியின் இரண்டாவது அகில இந்திய கராத்தே போட்டிகள், வரும் 25 ம் தேதி திண்டிவனம் மயிலம் ரோட்டிலுள்ள சுலோச்சனா பங்காரு திருமண நிலையத்தில் நடக்க உள்ளது.
இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை ஹிக்வானா ஷிட்டோரியோ கராத்தே பள்ளியின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.