ADDED : செப் 25, 2025 03:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார், தாலுகா பகுதிக்கு உட்பட்ட ஆரோவில், கோட்டக்குப்பம், கிளியனுார் உள்ளிட்ட, போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர் கூட்டம் நடந்தது. வானுார் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தாசில்தார் வித்யாதரன் தலைமை தாங்கினார்.
கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்., பா.ஜ., பா.ம.க., வி.சி., கம்யூ., உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில், இனிவரும் காலங்களில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனை பிரசாரம் நடத்த வழிகாட்டுதல் நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் சந்தியா, திருமால், கலையரசி, விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.