/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த இடங்கள்... ஒதுக்கீடு; கலெக்டருக்கு ஆய்வறிக்கையை அனுப்பி வைத்த எஸ்.பி.,
/
போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த இடங்கள்... ஒதுக்கீடு; கலெக்டருக்கு ஆய்வறிக்கையை அனுப்பி வைத்த எஸ்.பி.,
போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த இடங்கள்... ஒதுக்கீடு; கலெக்டருக்கு ஆய்வறிக்கையை அனுப்பி வைத்த எஸ்.பி.,
போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த இடங்கள்... ஒதுக்கீடு; கலெக்டருக்கு ஆய்வறிக்கையை அனுப்பி வைத்த எஸ்.பி.,
ADDED : செப் 30, 2025 05:55 AM

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் வரும் காலங்களில் எந்தெந்த இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள்நடத்துவதற்கான இடுங்களை எஸ்.பி., கண்டறிந்து ஆய்வறிக்கையை கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, தேர்தல் பிரசாரம் கூட்டம் மற்றும் போராட்டங்கள், தெரு முனை பிரசார கூட்டங்கள் அதிக அளவில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
அரசியல் கட்சிகள் போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளுக்கு நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்பது வழக்கம்.
ஆனால், சில அரசியல் கட்சிகள் போலீசாரிடம் அனுமதி பெறாமல், போராட்டம் நடத்துவது, கூட்டங்கள் நடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போது கரூரில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு எந்த இடம் தேர்வு செய்வதில் என்று குழப்பம் ஏற்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது போன்று, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், வருங்காலத்தில் தேர்தல் பொதுக் கூட்டங்கள், தெருமுனை பிரசாரம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளை வரைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு, மாவட்டங்களில் எந்த இடங்களில் கூட்டம், போராட்டம் உள்ளிட்டவை நடத்து வேண்டும் என்பது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி., சரவணன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு, கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மட்டும், 28 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில், விழுப்புரம், திண்டிவனம், வானுார், விக்கிரவாண்டி, ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட 31 இடங்களில் எந்தெந்த இடங்களில் நடத்துவதற்கு போலீசார் அனுமதி கொடுப்பார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஒவ்வொரு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடத்த வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் மந்தக்கரை, வண்டிமேடு நுழைவாயில் தெருமுனை பிரசாரம் நடத்தலாம். திண்டிவனத்தில் ஆர்.எஸ்.பிள்ளை வீதி, காந்தி சிலை ஆகிய இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.
வண்டிமேடு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் தெருமுனை பிரசாரம் ஆர்.எஸ்.பிள்ளை வீதி, பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில், செஞ்சி பஸ் ஸ்டாப்பிங், காந்தி சிலை ஆகிய இடங்களில் நடத்தலாம்.
மயிலத்தில் கூட்டேரிப்பட்டில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டமும் செஞ்சியில், செஞ்சி, வல்லம் பி.டி.ஓ.,அலுவலகம் எதிரில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும், மந்தைவெளி எம்.ஜி.ஆர்.நகர். நாட்டார்மங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம்.
கோட்டகுப்பத்தில் பேரூராட்சி அலுவலகம் எதிரில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும், வானுாரில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த வானுார் தாலுகா அலுவலகம் எதிரிலும், வானுார் கூட்ரோடு, திருவக்கரை நாடக அரங்கம் ஆகிய இடங்களில் பொதுகூட்டங்கள் நடத்துவதற்கும் அனுமதிக்கப்படும்.
எஸ்.பி., பரிந்துரையின் பேரில், கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இடங்கள் குறித்து, ஒவ்வொரு தாலுகா அலுவலங்களிலும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டங்கள் நடந்தது.
இந்த கூட்டங்களில் பங்கேற்ற சில அரசியல் கட்சிகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட இடங்கள் இல்லாமல், கூடுதலாக சில இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் பரிந்துரை பற்றி கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் பரிசீலனை செய்து முடிவு எடுப்பார்கள் என வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இனி வரும் காலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு மட்டுமே போலீசார் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுமதி கொடுப் பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.