/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் தொகுதிக்கு மாற்று வேட்பாளர் வி.சி., கட்சியில் சலசலப்பு
/
விழுப்புரம் தொகுதிக்கு மாற்று வேட்பாளர் வி.சி., கட்சியில் சலசலப்பு
விழுப்புரம் தொகுதிக்கு மாற்று வேட்பாளர் வி.சி., கட்சியில் சலசலப்பு
விழுப்புரம் தொகுதிக்கு மாற்று வேட்பாளர் வி.சி., கட்சியில் சலசலப்பு
ADDED : மார் 19, 2024 05:55 AM
விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சி சார்பில் மீண்டும் ரவிக்குமார் நிற்க வாய்ப்புள்ளதால் அக்கட்சியில் பொறுப்பிலிருந்த மாஜி நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில், கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதி வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் ரவிக்குமாரே இந்த தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், வி.சி., முன்னாள் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்தில், ரவிக்குமார் எம்.பி.,யாக இருந்த கடந்த 5 ஆண்டுகளுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் சமுதாயத்திற்கு ஏதும் செய்யவில்லை. இதனால், இந்த லோக்சபா தேர்தலில் ரவிக்குமாரை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது. இவருக்கு பதிலாக, தலைவர் திருமாவளவன், வேறு ஒருவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு அனுப்பியுள்ளனர். ரவிக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி பிரமுகர்கள் உள்ள நிலையில், வி.சி., கட்சியிலேயே மாஜி நிர்வாகிகள் போர்கொடி துாக்கியுள்ளது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

