sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விஜய் கட்சியில் சேர மாற்று கட்சியினர் தீவிரம் மாநாடு தேதி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு?

/

விஜய் கட்சியில் சேர மாற்று கட்சியினர் தீவிரம் மாநாடு தேதி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு?

விஜய் கட்சியில் சேர மாற்று கட்சியினர் தீவிரம் மாநாடு தேதி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு?

விஜய் கட்சியில் சேர மாற்று கட்சியினர் தீவிரம் மாநாடு தேதி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு?


ADDED : செப் 22, 2024 01:38 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் தேதி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.

த.வெ.க., மாநாடு நடத்த முடிவு செய்துள்ள தேதி, தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன் வருகிறது. அப்போது தலைநகரான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பண்டிகையை கொண்டாட செல்வோரால், மாநாடு நடைபெற உள்ள இடத்தையொட்டிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால், காவல் துறை அனுமதி வழங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், வரும் அக்டோபர் மாதத்தில் அதிகளவு மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இது போன்ற காரணங்களால், குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடைபெறுவது சந்தேகம்தான். தீபாவளிக்குப் பிறகு நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக உளவுத்துறை மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது.

இதற்கிடையே, மாநாட்டில் மாற்று கட்சி பிரமுகர்கள் த.வெ.க.,வில் கட்சியில் இணைய உள்ளனர்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள்தான் இப்போது மாநாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் கட்சி துவங்கியது முதல் இதுவரை கட்சிக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்படவில்லை. வரும் காலத்தில் த.வெ.க., திராவிட கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் கட்சியாக விளங்கும்.

எனவே, இப்போதே கட்சியில் முக்கிய பொறுப்புகளை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் கட்சியில் பிரகாசிக்கலாம் என கருதி, மற்ற கட்சியினர் த.வெ.க.,வில் சேர தீவிரம் காட்டி வருகின்றனர்.

விழுப்புரம், செப். 22-

ஏ.டி.எஸ்.பி.,யிடம் மனு

த.வெ.க., மாநில மாநாடு நடத்த அனுமதி கோரி, பொதுச் செயலாளர் விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி.,யிடம் மனு அளித்தார்.த.வெ.க., மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை என்ற இடத்தில் நடைபெறும் என, கட்சித் தலைவர் விஜய் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி மாநாடு நடத்துவதற்கான அனுமதி கோரி, ஏ.டி.எஸ்.பி., திருமாலிடம் மனு அளித்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'மாநாடு மேடை அமைப்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளோம். கட்சித் தலைவர் அறிவித்தபடி வரும் அக்டோபர் 27ம் தேதி மாலை மாநில மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கான பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும். இதில் பங்கேற்போரின் விபரங்களை முறைப்படி தலைவர் விஜய் அறிவிப்பார். குறித்துள்ள தேதியில் மாநாடு நிச்சயமாக நடைபெறும்' என்றார்.மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி, மாவட்டத் தலைவர் மோகன், இளைஞரணி தலைவர் சுரேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us