/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அரசு கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
விழுப்புரம் அரசு கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விழுப்புரம் அரசு கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விழுப்புரம் அரசு கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : அக் 21, 2024 06:17 AM

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் 1994-98ம் கல்வி ஆண்டில், பொருளியல், வரலாற்று துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வரலாற்று துறை இணை பேராசிரியர் விஜயரங்கம் வரவேற்றார். முன்னாள் மாணவர்களான கவிதா சந்திரசேகர், 'தி இந்தியா சிமென்ட்ஸ்' மக்கள் தொடர்பு மேலாளர் மூர்த்தி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
வேலுார் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் மலர் சிறப்புரையாற்றினார். வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர் ராஜசேகர், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் தண்டபாணி, வரலாற்று துறை தலைவர் கார்த்திகேயன் வாழ்த்திப் பேசினர்.
முன்னாள் மாணவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள், இன்னாள் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை கவுரவித்து நினைவுப்பரிசு வழங்கினர்.