/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஆக 06, 2025 12:29 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தென்பேரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தென்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாணவர்கள் வசந்தா, ஆனந்த சக்திவேல், ராஜேந்திரன், தேவகி, பெரியான் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் சிவக்குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினார்.
முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு இறை வணக்கம் மேடை மற்றும் கொடிக்கம்பத்தை பரிசாக அமைத்து கொடுத்தனர்.
உதவியாளர்கள் பாலச்சந்தர் கணபதி வள்ளி மற்றும் 2002-2003ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

