/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூதக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
/
பூதக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED : மே 28, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஞானக்கல்மேடு சுயம்பு பூதக்காளி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
அதனையொட்டி, சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், தீச்சட்டி எடுத்தல் விழா நடந்தது. இதில் சுற்று பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் வானூர் ஒன்றிய சேர்மன் சிவா செய்திருந்தார்.