/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அம்பேத்கர் மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
/
அம்பேத்கர் மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 20, 2025 12:00 AM

செஞ்சி: செஞ்சியில் அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாக்கினார். செயலாளர் சங்கர் வரவேற்றார். அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் மழைமேனி பாண்டியன், வி.சி., மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், காங்., மாநில துணைத் தலைவர் ஸ்ரீரங்கபூபதி, பழங்குடி இருளர் சங்கம் சுந்தரம், முஸ்லிம் முன்னேற்ற கழகம் சையத் உஸ்மான் மற்றும் முத்து, ராசநாயகம், துரைசங்கர், திருநாவுக்கரசு, தலித் மகிழ்வரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய வழக்கறிஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கோரியும் பேசினர். மாவட்ட அமைப்பாளர் காசி அய்யனார் நன்றி கூறினார்.