/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
/
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
ADDED : அக் 20, 2025 12:00 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில், மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தில், கேள்வி நேரத்தின் போது விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பேசுகையில், ' சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் மருத்துவமனை மற்றும் டீன் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்குகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், ' முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாாி மருத்துவமனையில் அனைத்து உயர்தர சிகிச்சை வசதிகளும் உள்ளன.
இந்த மருத்துவமனை வளாகம் மற்றும் டீன் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்காத அளவிற்கு, கலெக்டர் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என்றார்.