நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: கர்ணாவூர் கிராமத்தில் சுவாமி சிலையில் இருந்த நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலம் அருகே உள்ள கர்ணாவூர் கிராமத்தில் இளங்காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கமான பூஜைக்காக கோவிலை திறக்க, கோவில் பூசாரி சர்க்கரை வந்தார். அப்போது, கோவிலின் இரும்பு கிரில் கேட் உடைக்கப்பட்டு கிடந்தது.
கருவறையின் பூட்டு உடைக்க முடியாததால், சவுக்கு மர கம்பு மூலம் அம்மன் சிலையை அருகில் இழுத்து, கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் தங்க பொட்டுவை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மயிலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.