/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
/
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
ADDED : ஜூலை 14, 2025 08:08 AM
வானுார் : 'தமிழகத்தில் போலீஸ் துறை ஏவல் துறையாக உள்ளது' என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கூறினார்.
விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த கட்சி தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த பின் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் போலீஸ் துறை ஏவல் துறையாக உள்ளது. 25 'லாக்கப் டெத்' நடந்துள்ளது. போலீசார் மக்களை காப்பாற்றுவதற்கு பதில் குண்டர்களாக உள்ளனர். விலைவாசி விண்ணை முட்டும் அளவில் உள்ளது. இந்த ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை.
கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வர உள்ளது. 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம் அமையும். திருமாவளவன் தினமும் ஒரு கருத்து கூறி, அரசியலுக்காக எதையோ பேசி வருகிறார். அதிக சீட்டுகளை பெற இதுபோன்று பேசுகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியை கண்டு தி.மு.க., அச்சப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பல ரவுடிகள் தி.மு.க., கொடியை வைத்து கொண்டு சுற்றி வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு தினகரன் கூறினார்.