/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் போலீசாருக்கான பயிற்சி நிறைவு விழா
/
பெண் போலீசாருக்கான பயிற்சி நிறைவு விழா
ADDED : ஜூலை 14, 2025 04:13 AM
மயிலம் : மயிலம், கொல்லியங்குணம் காவலர் பள்ளியில் ஆயுதப்படை பெண் போலீசாருக்கான பயிற்சி வகுப்புகள் நிறைவு விழா நடந்தது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற 273 இரண்டாம் நிலை ஆயுதப்படை பெண் போலீசாருக்கு மயிலம் ஒன்றியத்தில் உள்ள கொல்லியங்குணம் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி வகுப்பு நடந்தது.
இதன் நிறைவு விழாவிற்கு, தமிழ்நாடு குற்ற புலனாய்வு கூடுதல் இயக்குனர் அமல்ராஜ், சென்னை காவல்துறை தலைவர் ஆனி விஜயா ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினர்.
விழாவில், பயிற்சி பள்ளியின் துணை முதல்வர் எட்டியப்பன், இன்ஸ்பெக்டர்கள் பாலின், தீபா, சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் ஆயுதப்படை போலீசார் பங்கேற்றனர்.