/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.ம.மு.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
அ.ம.மு.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : அக் 30, 2024 05:02 AM

வானுார், : வானுார் ஒன்றிய அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்.பி., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
வானுார் தெற்கு ஒன்றிய அ.ம.மு.க., செயலாளர் சதீஷ், மாவட்ட அ.ம.மு.க., ஜெ., பேரவைச் செயலாளர் வழக்கறிஞர் முருகன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செம்மல், பொதுக்குழு உறுப்பினர் குறளரசன் தலைமையில் அ.ம.மு.க.,வைச் சேர்ந்த நிர்வாகிகள், அக்கட்சியல் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க., ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், விக்கிரவாண்டி சிறுபான்மைப் பிரிவு செயலாளர் சர்புதீன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் பலராமன், ஐ.டி., பிரிவு பேரூராட்சி செயலாளர் சசிகுமார், நகர இளைஞரணி வாசு உட்பட பலர் உடனிருந்தனர்.