ADDED : செப் 22, 2024 02:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில், அண்ணாதுரை 116வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கண்டமங்கலம் அடுத்த சித்தலம்பட்டில் நடந்தது.
மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் கணபதி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வாஞ்சிநாதன், ரமேஷ் வரவேற்றனர். மாவட்ட அணி செயலாளர்கள் அருண் பிரகாஷ், சுகந்தி ஆகியோர் துவக்கவுரையாற்றினர். தலைமைக் கழக பேச்சாளர் டேவிட் பிரவீன்குமார் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ்குமார், பொக்கிஷம், பொதுக்குழு உறுப்பினர்கள் குறளரசன், தன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள், சிவகுமார், சதீஷ், ராமச்சந்திரன், அண்ணாதுரை, கோதண்டபாணி, நகர செயலாளர் கேசவன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் சுகுமார் நன்றி கூறினார்.