/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 18, 2024 08:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி ; விக்கிரவாண்டியில் அ.ம.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் கணபதி, தகவல் தொழில் நுட்ப செயலாளர் முத்துக்குமார், வழக்கறிஞர் அணி மகேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.
கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலாளர் செந்தமிழன், கட்சி வளர்ச்சிப் பணி குறித்து பேசினார்.
ஒன்றிய செயலாளர்கள் கோதண்டபாணி, தணிகாசலம், ராமச்சந்திரன், அண்ணாதுரை, குமரன், சரவணன், ஜெயபாலன், நகர செயலாளர்கள் அன்சாரி, சக்திவேல், முருகன், கந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

