/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.ம.மு.க., அலுவலகம் திறப்பு விழா
/
அ.ம.மு.க., அலுவலகம் திறப்பு விழா
ADDED : ஜூலை 14, 2025 03:46 AM

வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அ.ம.மு.க., தலைமை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் (மயிலம் ரோடு) நடந்த விழாவிற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல், அண்ணாதுரை, அருணகிரி கண்ணா, செல்வகுமார் வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினர் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கோமுகிமணியன் வாழ்த்தி பேசினார்.
அமைப்பு செயலாளர் கணபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமார், வர்த்தக அணி இணைச் செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மோகன், ரமா, அங்கையற்கன்னி, அருண்பிரகாஷ், முருகேசன்,கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் வாஞ்சிநாதன், சுகுமார், ரங்கநாதன், சிவக்குமார், சக்திவேல், எத்திராஜ், ஸ்ரீராமுலு, சக்திவேல், சுரேஷ், கண்ணப்பன், செந்தில்குமார் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தலைமைக் கழக பேச்சாளர் டேவிட் பிரவின்குமார் நன்றி கூறினார்.