/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணி: கலெக்டர் ஆய்வு
/
கண்டமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணி: கலெக்டர் ஆய்வு
கண்டமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணி: கலெக்டர் ஆய்வு
கண்டமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 14, 2025 03:53 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் அரசின் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆய்வு செய்தார்.
மோட்சகுளம் ரேஷன் கடையின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு, கார்டுதாரர்களின் எண்ணிக்கை விபரம் குறித்தும், நடப்பு மாதத்திற்கு வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் இருப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.
கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 3.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கட்டுமான பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தின் விதை இருப்பு மற்றும் உயிரி உரம் இருப்பு, குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விவசாயிகளுக்கு தலா, 4000 ரூபாய் மதிப்பீட்டில் குருவை தொகுப்புகளையும், வேளாண் பசுமை காடுகள் இயக்கத்தின் கீழ் தென்னங்கன்றுகள் மற்றும் செம்மரக்கன்றுகளை வழங்கினார்.
பின், நவம்மாள்மருதுார் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணையில் பூவரசன், புளியமரம், சீதா, நாவல், கொய்யா, தேக்கு, புங்கை, பாதாம் மற்றும் தைலம் போன்ற 6,500 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வேளாண் துறை இணை இயக்குனர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி, வளவனுார் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, கண்டமங்கலம் பி.டி.ஒ., சண்முகம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.