/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் நடைபயணம் நடத்தி பலத்தை காட்ட அன்புமணி தீவிரம்
/
திண்டிவனத்தில் நடைபயணம் நடத்தி பலத்தை காட்ட அன்புமணி தீவிரம்
திண்டிவனத்தில் நடைபயணம் நடத்தி பலத்தை காட்ட அன்புமணி தீவிரம்
திண்டிவனத்தில் நடைபயணம் நடத்தி பலத்தை காட்ட அன்புமணி தீவிரம்
ADDED : ஆக 26, 2025 06:56 AM
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், கட்சி யாருக்கு சொந்தம் என்பதை, தேர்தல் ஆணையம் தலையிட்டு முடிவிற்கு கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
க டந்த 17ம் தேதி நடந்த பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, பா.ம.க., என்றால் தான்தான் என ராமதாஸ் தொண்டர்கள், கட்சியினரிடம் நிரூபித்து காட்டினார். பெரும்திரள் கூட்டம் அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி தரும் வகையில், வரும் 1ம் தேதி அன்புமணி, 'உரிமை மீட்க; தலைமுறை காக்க' நடை பயணத்தை திண்வனம், செஞ்சியில் மேற்கொள்ள உள்ளார். அன்று காலை செஞ்சி கோட்டை மற்றும் நந்தன் கால்வாயை பார்வையிடுகிறார். மாலையில் திண்டிவனத்தில் ராமதாஸ் நிறுவனர் வசிக்கும் காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள தாலுகா அலுவலக சந்திப்பிலிருந்து தொண்டர்களுடன் நடைபயணமாக நேரு வீதி வழியாக வந்து, வண்டிமேடு திடலில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு, செஞ்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ராமதாசின் சொந்த ஊரான திண்டிவனத்தில், அன்புமணி தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், பெரு ம் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கட்சியினரிடம் அறிவுறுத்தியதால், மற்ற இடங்களில் நடந்த நடைபயணத்தை விட திண்டிவனம் நடைபயணம் அன்புமணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என அவரது ஆதாவளர்கள் தெரிவிக்கின்றனர்.