/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க.,வை தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் வழக்கு போடுவோம்: அன்புமணி எச்சரிக்கை
/
பா.ம.க.,வை தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் வழக்கு போடுவோம்: அன்புமணி எச்சரிக்கை
பா.ம.க.,வை தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் வழக்கு போடுவோம்: அன்புமணி எச்சரிக்கை
பா.ம.க.,வை தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் வழக்கு போடுவோம்: அன்புமணி எச்சரிக்கை
ADDED : பிப் 12, 2024 06:49 AM
செஞ்சி : பா.ம.க.,வை தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் வழக்கு தொடுக்கப்படும் என, பா.மக.,.மாநில தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று கூறியதாவது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. ஆந்திராவில் இருந்து இந்த மாவட்டத்திற்கு வருகிறது. திருவண்ணாமலை நகரத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி என சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரித்துள்ளது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கஞ்சா, அபின், கோகைன் என அமெரிக்காவில் கிடைக்கும் எல்லா போதை பொருட்களும் தமிழகத்தில் கிடைக்கிறது. கஞ்சாவை கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழகம் 10 ஆண்டுகளில் பீகார், ஜார்கண்ட், உத்ரகண்ட் மாநிலத்திற்கு நிகரான நிலை ஏற்படும்.
பா.ம.க., வின் கூட்டணி நிலைபாடு விரைவில் வெளிப்படுத்துவோம்.
கூட்டணி நிலைப்பாட்டை ராமதாஸ் அறிவிப்பார் என தெரிவித்துள்ளோம்.
தமிழ்நாட்டில் பா.ம.க., எத்தனேயோ சாதனைகளை செய்துள்ளது. இந்திய அளவிலும் சாதனை செய்துள்ளோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் நாங்கள் சம்பாதிக்கலாம். நாடு தான் முக்கியம் என்று மத்திய அமைச்சராக இருந்தபோது, பொது இடங்களில் புகை புடிக்க தடை, புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை விளம்பரம் கொண்டு வந்தோம். குட்காவை ஒழித்தது மிகப்பெரிய சாதனை.
வேண்டுமென்றே தனிப்பட்ட முறையிலும், கட்சியையும் விமர்சனம் செய்யாதீர்கள். அப்படி செய்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வழக்கு போடுவோம்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.