ADDED : நவ 05, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது.
முன்னதாக நேற்று மாலை 6:00 மணிக்கு ராமநாதீஸ்வரர், ஞானாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு அன்னாபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.
தமிழ் வேதவார வழிபாட்டு சபையின் சார்பில் தமிழ் வேத பாராயணம் நிகழ்ச்சி நடந்தது.
அங்குராயநத்தம், மடவிளாகம், கண்டாச்சிபுரம் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.

