/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா
/
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா
ADDED : மே 24, 2025 12:26 AM

திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமநாதன், கல்பனா சரவணன் வாழ்த்தி பேசினர். கல்லுாரி முதல்வர் அன்பழகன் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவி வினோதினி வரவேற்றார்.
கல்லுாரி தலைவர் பேசுகையில், 'மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து இந்தியாவிற்கு தங்களது பங்களிப்பை ஆற்ற வேண்டும். இக் கல்லுாரிக்கு புகழ் சேர்க்க வேண்டும்' என்றார்.
நிர்வாக குழு உறுப்பினர் அழகு மூர்த்தி, சிறப்பு விருந்தினர் கற்பக விநாயகா மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்வி ஆராய்ச்சி நெறியாளர் முருகேசன் சிறப்புரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
மேலும் தேர்ச்சி விகிதம் அதிக அளவில் பெறுவதற்கு உதவிய 3 பேராசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், சிறந்த துறை தலைவருக்கான விருதும், மேலும் கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 30 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கல்லுாரி பேராசிரியர்கள் துணைத்தலைவர்கள், மாணவர்கள் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவி சாருமதி நன்றி கூறினார்.