ADDED : மார் 29, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் மதன்குமார், மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி தலைவர் சிவக்குமார், தென்பெண்ணை இலக்கிய சாரல் தலைவர் பழனி, செல்வகுமார் சிறப்புரையாற்றினர். கிராம கல்வி குழு தலைவர் பாரதி வாழ்த்தி பேசினார்.
மாணவர்களின் பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.