/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சங்கமம் கல்லுாரியில் ஆண்டு விழா
/
சங்கமம் கல்லுாரியில் ஆண்டு விழா
ADDED : ஏப் 16, 2025 07:56 AM

செஞ்சி : அன்னமங்கலம் சங்கமம் கலை அறிவியல் கல்லுாரியில் 17வது ஆண்டு விழா கல்லுாரி அரங்கத்தில் நடந்தது.
கல்லுாரி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பரமசிவம், செயலாளர் தேவி, பொருளாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லுாரி முதல்வர் ஹரிகுமார் வரவேற்றார்.
சென்னை ஐகோர்ட் சிவில் நீதிபதி பார்த்திபன், திரைப்பட நடிகர் குரு சோமசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் விஜயபாஸ்கர் செய்திருந்தார்.

