ADDED : பிப் 26, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சுப்ரமணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா வரவேற்றார்.
பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட தொழில் நுட்ப பிரிவு சாம்பு, நகாய் ரகுராமன், மாறன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஆசிரியை பெமினா நன்றி கூறினார்.

