sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போலி நகை அடகு வைக்க முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

/

போலி நகை அடகு வைக்க முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

போலி நகை அடகு வைக்க முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

போலி நகை அடகு வைக்க முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது


ADDED : ஏப் 26, 2025 04:15 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே போலி நகையை அடகு வைக்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி அனிதா, 32; இவர் அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

கடந்த 7ம் தேதி பைக் மற்றும் மொபட்டில் வந்த 2 வாலிபர்கள் 3 மோதிரங்களை அடகு வைத்தனர். நகையை பரிசோதனை செய்ததில் அது, தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நகை அடகு கடைக்கு வந்ததும் அங்கிருந்த 2 வாலிபர்களில் ஒருவர் தப்பியோடினார்.

பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர், கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் அஜித், 22; என்பதும் தப்பியோடியவர் ஊரல் கரைமேடு பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் சூர்யா, 22; என்பதும் தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து அஜித்தை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சூர்யாவை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us