ADDED : அக் 26, 2026 04:38 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அக்டோபர் 26 முதல் வரும் 1 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் பேரில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமையில், அரசு துறை அலுவலர்கள் இன்று (அக்.,26) உறுதிமொழியேற்றனர்.
நாட்டின் பொருளாதாரம் அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு, ஊழல் ஒரு தடையாக உள்ளதாக நம்புகிறேன். அரசு, மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு குடிமகனும், எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியத்துடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும்.
எனவே நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும் உறுதிமொழியேற்றனர்.
டி.ஆர்.ஓ., அரிதாஸ், சப் கலெக்டர் காதர்அலி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயா, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
