/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர் மஸ்தான் பதவி பறிப்பு எதிர் கோஷ்டியினர் கொண்டாட்டம்
/
அமைச்சர் மஸ்தான் பதவி பறிப்பு எதிர் கோஷ்டியினர் கொண்டாட்டம்
அமைச்சர் மஸ்தான் பதவி பறிப்பு எதிர் கோஷ்டியினர் கொண்டாட்டம்
அமைச்சர் மஸ்தான் பதவி பறிப்பு எதிர் கோஷ்டியினர் கொண்டாட்டம்
ADDED : அக் 01, 2024 07:15 AM
மஸ்தான் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மரக்காணம் ஒன்றியம், நகர நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விழுப்புரம் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சராக மஸ்தான் பதவி வகித்த போது, மரக்காணம் ஒன்றியம், நகரத்தில் பதவி வகித்த அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்களை நீக்கி விட்டு தனது ஆதரவாளர்களுக்கு பொறுப்புகள் வழங்கினார். இதனால் பொன்முடியின் ஆதரவாளர்கள் கட்சி பணிகளை செய்வதில் சுணக்கம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தி.மு.க., தலைமை மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதிவியை பறித்தது. அதன் பின் தற்போது அமைச்சர் பதவியையும் பறித்தது.
இதனால் மஸ்தானால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட எதிர்ப்பு கோஷ்டியினர் மரக்காணத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் தெய்வநாயகம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவி பறி பேனதை கொண்டாடும் விதத்தில் மரக்காணம் பஸ் நிலையம், முருக்கேரி பஸ் நிறுத்தத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.