/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறந்த ஊராட்சிக்கு விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சிறந்த ஊராட்சிக்கு விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 10, 2025 07:19 AM
விழுப்புரம்: மாவட்டத்தில் சிறந்த ஊராட்சிக்கான விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தமிழக அரசு ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கம், ஒற்றுமையை கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் தகுதி படைத்த, 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதோடு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி, இந்தாண்டிற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள், சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்க, https://tinyurl.com/Panchayataward (அல்லது) https://cms.tn.gov.in/cms migrated/document/forms/Samooga Nallinakka Ooraatchi Award Application.pdf என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம். இந்த படிவம் மற்றும் பிற உரிய ஆவணங்களை வரும் 14ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் மாலை 4.00 மணிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும்.

