/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 13, 2024 07:13 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருது பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது, குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதுக்கு தகுதிகளாக தமிழகத்தில் வசிக்கும் இந்திய குடிமக்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்பு, அரசு பணியாளர்களின் சமூக நல்லிணக்க செயல், இவர்கள் ஆற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இந்த விருது பெற தகுதி உடையவராவர்.
ஜாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தோர் பிற ஜாதி, இன, வகுப்பைச் சேர்ந்தவர்களேயோ அல்லது அவர்களின் உடைமைகளையோ வகுப்பு கலவரம் போதோ, தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில், அவரின் உடல், மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
இதற்கு தகுதியானோர், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

