/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செவிலியர், காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
செவிலியர், காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவிலியர், காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவிலியர், காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 17, 2024 05:38 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் செவிலியர், காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், குழந்தைகள் நலத்துறை சார்பில், பெண் சிசு கொலை தடுக்கவும், குப்பை தொட்டிகளில் விட்டு செல்வதை தடுக்கவும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுகிறது.
இந்த அலுவலகத்தில், 1 செவிலியர் (பெண் ) மற்றும் 1 காவலர் காலி பணியிடம் தற்போது நிரப்பப்பட உள்ளது. செவிலியர் பணிக்கு டிப்ளமோ நர்சிங் முடித்திருத்தல் வேண்டும்.
மாத ஊதியம் 7,500 ரூபாய் மற்றும் காவலர் பணிக்கு 8 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இப்பணிக்கான ஊதியம் 4500 ரூபாய் ஆகும்.
விண்ணப்பதாரர்கள் 42 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இந்த இரு பணியிடமும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளன. தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவத்தினை, விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள், அதற்கான படிவத்தில் 15 நாட்களுக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம், 605 602. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி வாய்ந்த நபர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.