ADDED : ஜூன் 28, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் 3 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வாகி, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலகில் பணி ஒதுக்கீடு பெற்ற, 3 உதவிப்பொறியாளர்களுக்கு, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் பணி நியமன ஆணையை வழங்கினார்.
கூடுதல் கலெக்டர் பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

