/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிக ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் நியமனம் : எம்.எல்.ஏ., மஸ்தான் ஆணை வழங்கல்

ADDED : நவ 12, 2025 10:38 PM

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் மாற்றுத்திறனாளி நியமன ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் நியமன செய்யப்பட்டுள்ளனர்.
மேல்மலையனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒன்றிய கவுன்சிலர், 55 ஊராட்சிகளில் 55 வார்டு உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பும், அறிமுக கூட்டமும் நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ஜெய்சங்கர் வரவேற்றார்.
மேல்மலையனுார் ஒன்றியத்தில் தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளியான ஈயகுணத்தை சேர்ந்த மணிவண்ணனை ஒன்றிய கவுன்சிலராக, கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான் நியமித்துள்ளார்.
இந்தியாவிலேயே எடுத்துக்காட்டாக மாற்றுத் திறனாளிகளை முதல் முறையாக உள்ளாட்சி பதவிகளில் நியமனம் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி ஒன்றிய கவுன்சிலர், 55 வார்டு உறுப்பினர்களுக்கான நியமன ஆணைகளை மஸ்தான் எம்.எல்.ஏ., வாழ்த்து கூறி வழங்கினார்.
இதில் ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.