/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவிகளுக்கு பாராட்டு விழா
/
கல்லுாரி மாணவிகளுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூலை 21, 2025 04:57 AM

செஞ்சி :  கிளியனுார் ரங்க பூபதி நர்சிங் கல்லுாரியில் காவல் துறை சார்பில் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பெண்கள், குழந்தைகள், சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் போட்டிகள் நடந்தது.
கண்காட்சியில் கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவியர் அரங்கம் அமைத்திருந்தனர்.
மேலும், ஓவிய போட்டியில் மாணவி அக் ஷயா இரண்டாம் இடமும், பேச்சுப் போட்டியில் மாணவி ஜனனி மூன்றாம் இடமும் பிடித்தனர். இந்த மாணவிகளுக்கு கல்லுாரியில் பாராட்டு விழா  நடந்தது. தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார்.
கல்லுாரி துணை முதல்வர் மாலதி, பேராசிரியர்கள் தனலட்சுமி, கலைமதி, சுகந்தி, வனிதா, ஜெயஸ்ரீ, சுபலட்சுமி மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

