/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சதுரங்க போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா
/
சதுரங்க போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா
சதுரங்க போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா
சதுரங்க போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா
ADDED : நவ 06, 2024 11:19 PM
வானூர்; மாவட்ட மற்றும் மாநில அளவில் நடந்த சதுரங்கப்போட்டியில் பங்கேற்ற மாணவருக்கு கிளியனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடந்த சதுரங்கப்போட்டியில் 11 வயதிற்குட்பட்ட பிரிவில் வெற்றி பெற்ற கிளியனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் முகிலன், வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் 28ம் தேதி திருப்பத்துார் மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் பங்கேற்று, 5 சுற்றுகள் வரை வெற்றி பெற்றார். அவருக்கு கிளியனுார் ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் அப்தா பேகம் தலைமையில் ஆசிரியர்கள், மாணவரை பாராட்டி விருது வழங்கி கவுரவித்தனர். மேலும், மாவட்ட அளவில் நடந்த சதுரங்கப்போட்டியில் பங்கேற்ற மாணவி மைனாவதியையும் கவுரவித்தனர். இதில், நல்லாசிரியர் லட்சுமிரேகா, பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜானகி, பள்ளி ஆசிரியர்கள் ஜனனி, வள்ளி, செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.