ADDED : டிச 23, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் சார்பில், பாராட்டு விழா நடைபெற்றது.
வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான மையத்தில், தினந்தோறும் இலவச பயிற்சி நடைபெறுகிறது.
இந்த பயிற்சி முகாமில், 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான சேவையாற்றிய ஈஸ்வரிய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சிறப்பாக பணியாற்றிய ஆன்மீக சேவாதாரிகளை பாராட்டி, மைய நிர்வாகி செல்வமுத்துக்குமரன் சால்வை அணிவித்து, கவுரவித்தார்.

