/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா
/
தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா
ADDED : ஜூலை 19, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : சென்னகுணம் அரசு உயர்நிலை பள்ளியில் அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) நாகராஜன் தலைமை தாங்கினார். ஆசிரியர் அந்தோணிராஜ் வரவேற்றார். காந்தி காமராஜ் பேரவை நாஞ்சில் ராஜேந்திரன், சிந்தனை பேரவை பாலசுப்ரமணியம், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவர் வீரன் ஆகியோர் அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியர் அருணகிரிக்கு கேடயம் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியை பாவேந்தர் பேரவை உலகதுரை தொகுத்து வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவானந்தம், ஊராட்சி துணைத் தலைவர் மகாலிங்கம், சித்தார்த்தன் உட்பட பலர் பங்கேற்றனர். சீனிவாசன் நன்றி கூறினார்.

