ADDED : ஜூலை 06, 2025 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கொற்றவை வழிபாடு எனும் தலைப்பில் தொல்லியல் ஆய்வு சார்ந்த கருத்தரங்கம் விழுப்புரத்தில் நடந்தது.
கருத்தரங்கிற்கு, பள்ளி தாளாளர் சோழன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார். கணினி ஆசிரியர் கார்த்திக், தமிழாசிரியர் சீதா, கணித ஆசிரியர் இளவரசி முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் ரபி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், தனித்தன்மை வாய்ந்த கொற்றவை சிற்பங்கள் குறித்தும், அதன் புகைப்படங்களுடன் விளக்கி பேசினார். தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.
உதவி தலைமை ஆசிரியர் பிரிதிவிராஜ் நன்றி கூறினார்.