UPDATED : அக் 09, 2026 01:29 AM
ADDED : அக் 09, 2026 01:27 AM
கண்டமங்கலம்: கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் வட்டார அளவிலான பயிற்சி முகாம் நடந்தது.
விழுப்புரம் ஊரக வளர்ச்சி திட்ட உதவி செயற் பொறியாளர் விஜயராணி தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி பி.டி.ஓ., சிவகுமார் வரவேற்றார். வட்டார ஊராட்சி பி.டி.ஓ., இந்திராகாந்தி முன்னிலை வகித்தார். பயிற்றுனர் தலதஹிர் அடிப்படைத் தேவைகள் மற்றும் லட்சிய இலக்குகள் மக்கள் பங்களிப்புடன் எப்படி மதிப்பிடுவது குறித்து பயிற்சி அளித்தார்.
முகாமில் பயிற்சியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், தலைமையின் கீழ் 9 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று அடிப்படை தேவைகள் கண்டறிந்து அதன் அறிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சமர்ப்பிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன் (திட்டம்) சிவக்குமார் திவாகர் அரவிந்ததேவி, குமரவேல், ஒன்றிய பொறியாளர்கள் நிவாஸ், நடராஜன் ஆர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய மேற்பார்வையாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
