UPDATED : அக் 09, 2026 01:33 AM
ADDED : அக் 09, 2026 01:27 AM
திண்டிவனம்: மயிலம் தொகுதி வைரபுரம் கிராமத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ., பெற்றார்.
மயிலம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகம், தனது அலுவலகத்தில் தொகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், தொகுதியில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
நேற்று காலை தொகுதியைச் சேர்ந்த வைரபுரம், நெய்குப்பி கிராமங்களுக்கு ,நேரில் சென்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
இதில் முதியோர் ஓய்வூதியத் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம், இலவ வீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை குறித்த மனுக்களைப் பெற்று, அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
