/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
90 ஏரிகளில் மீன்பாசி குத்தகை விட ஏற்பாடு
/
90 ஏரிகளில் மீன்பாசி குத்தகை விட ஏற்பாடு
ADDED : ஜூன் 04, 2025 01:05 AM
விழுப்புரம் :விழுப்புரம் மாவட்டத்தில், 90 ஏரிகளில் மீன்வளத்துறை சார்பில் மீன்பாசி குத்தகை விடப்பட உள்ளது.
கலெக்டர் கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், 90 ஏரிகளில் மீன்பாசி வளர்ப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட உள்ளது. விழுப்புரம் தாலுகாவில் 14 ஏரிகள், விக்கிரவாண்டி தாலுகாவில் 14 ஏரிகள். திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் 18 ஏரிகள், செஞ்சி தாலுகாவில் 3 ஏரிகள், கண்டாச்சிபுரம் தாலுகாவில் 11 ஏரிகள், திண்டிவனம் தாலுகாவில் 20 ஏரிகள் வானுார் தாலுகாவில் 10 ஏரிகள் உட்பட 90 ஏரிகளுக்கு www.tenders.gov.in என்ற இணையதளத்தில், ஒப்பந்தம் கோரப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குநர், மீன்வளத்துறை அலுவலகம், விழுப்புரம்-. தொலைபேசி 04146-259329. தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.